நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Thursday, October 14, 2010

ஈரானிய திரைக்காவியம்

வணக்கம் நண்பர்களே,


Badkonake Safid (The White Baloon) (1995) - Jafer Penahi , என்கிற ஈரான் நாட்டு திரைப்படத்தைப் பற்றித்தான் இந்த பதிவு.

எப்பொழுதுமே ஈரான் நாட்டு திரைப்படம் மனதுக்கு நெருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கும், எனக்கு பிடித்த ஈரான் நாட்டு இயக்குநரான majid majidi - ன் children of heaven, color of paradise ஆகிய திரைப்படங்கள் குழந்தைகளின் உலகத்தைப் பற்றிய உன்னதமான படைப்பு, அந்த வகையில் Jafer Penahi-ன் The White Baloon திரைப்படமும் குழந்தைகளின் உலகத்தைப் பற்றிய உன்னதமான படைப்பு.


படத்தின் ஒன்லைன் ஸ்டோரி,

New year தொடங்க இன்னும் சில மணி நேரமே மீதமுள்ள நிலையில், தன் தாயிடம் gold fish வாங்குவதற்கு 100 டொமன்ஸ் ( ஈரான் பணம்) கேட்டு அடம் பிடித்து , தாயிடம் உள்ள 500 டொமன்ஸை வாங்கி செல்லும் குழந்தை அந்த பணத்தை ஒரு cell-க்குள் தவறி விழுந்து விடுகிறது, New year-க்கு முன் அந்த குழந்தை பணத்தை எடுத்ததா ? gold fish வாங்கியதா? என்பதை உணர்ச்சிகரமாகவும் , அழகாகவும் சொல்லியிருக்கும் படம்.



படத்தின் சிறப்புகள்

இந்த படத்தின் நாயகியான அந்த குழந்தையின் நடிப்பு சூப்பர், என்ன ஒரு expression? ( நம்மூர் நடிகர்கள் இந்த படத்தைப் பார்த்து கத்துக்கோங்க..) அந்த குழந்தை பணத்தை மீட்பதற்கு படும்பாடு , அதற்கு உதவி செய்யும் மனிதர்கள், என அனைவருமே மனதுக்கு நெருக்கமாகிறார்கள்.

குழந்தைகளின் உலகமே அலாதியானது, இது போன்ற படங்களைப் பார்க்கும்பொழுது, நம் மனம் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு செல்ல துடிப்பதை தடுக்க முடியவில்லை.

போதும் , இதற்கு மேல் இந்த படத்தைப் பற்றி சொன்னால்,படம் பார்க்கும் உங்கள் ரசனை குறைந்துவிடும், அதனால் கீழே உள்ள லிங்க் மூலமாக படத்தைப் பார்த்து ரசியுங்கள். நன்றி

you tube link

http://www.youtube.com/watch?v=5Z4eDsZvF2A

http://www.youtube.com/watch?v=u-pu12qJswQ

http://www.youtube.com/watch?v=8wMgEvXKPCE

http://www.youtube.com/watch?v=2q786_uWDCE

http://www.youtube.com/watch?v=e-hpo5u0oHg

http://www.youtube.com/watch?v=dbR617QQrho

http://www.youtube.com/watch?v=J09vMH12Kq8

http://www.youtube.com/watch?v=YBwBzI-4CiM

No comments:

Post a Comment