நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Thursday, October 14, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா

வணக்கம் நண்பர்களே,
"விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தைப் பற்றித்தான் இந்த பதிவு.

என்னாடா இவன் லூசா இருப்பான் போல, எப்ப வந்த படத்தைப்பத்தி இப்ப எழுதுறானு நினைக்கலாம், முதல் முறை படம் பார்த்தவுடனே ரொம்ப பிடிச்சுப்போயி எழுதனும்னு நினைச்சேன், ஆனா வேலைப்பளு+ எழுத சோம்பேறி.

நேற்று 2-ம் முறை பார்த்தபோது கண்டிப்பாக எழுதனும்னு தோணுச்சு எழுதிட்டேன்
 
 
 
தமிழ் சினிமால எனக்கு பிடிச்ச இயக்குநரில் கௌதமும் ஒருவர், காதலைப் பற்றி இவ்வளவு அழகாகவும், நாகரிகமாகவும் வேற எந்த இயக்குநரும் சொன்னதில்லைனு நினைக்கிறேன், இந்த அளவுக்கு காதலைப் பத்தி சொல்றதுக்கு ரொம்ப ரசித்து காதல் செய்திருக்கனும். சரி மேட்டருக்கு வருவோம்,



"விண்ணைத்தாண்டி வருவாயா" ஒவ்வொரு காட்சியுமே ரொம்ப அழகு, சிம்பு & திரிஷா நடிப்பு super. படதிதில் வர்ற ஒவ்வொரு வசனமும் படம் பாக்குற நம்மளையும் போட்டு தல கீழா திருப்புது, காலி பண்ணுது. நான் எப்படியெல்லாம் காதலிக்கனும்னு நினைச்சனோ, அப்படியெல்லாம் சிம்புவும் திரிஷாவும் காதலிக்க்குறாங்க, ஆனா எனக்குதான் இன்னும் ஒரு காதலி கூட கிடைக்கலை.சரி அத விடுங்க, கொஞ்ச நேரமே வந்தாலும் சமந்தா super figure. இசை - ஏ.ஆர்.ரஹ்மான் jaiho பாட்டுக்கு ஆஸ்கர் வாங்குனப்ப, அவர் அதுக்கு தகுதியானவர்தானான்னு தோணுச்சு, இந்தப் படத்தோட பாடல்களை கேட்டதுக்கப்புறம் 100% தகுதியானவர்தான்னு புரிந்தது, தாமரையின் வரிகள் அழகு தமிழை அள்ளித்தெழித்தது, costume, location, cinematography, specialy kiss scene (ஹி ஹி ஹி ) எல்லாம் super. படத்தோட வேகம்தான் கொஞ்சம் slow otherwise super.

பிடித்த வசனங்கள் :

1 . சிம்பு : பசங்க நிறைய பேர் love propose பண்ணியிருப்பாங்களே, mokka figure யே விடமாட்டங்க, நீ super figure வேற?.

திரிஷா : ஓங்கண்ணு வழியா யாரும் என்ன பார்க்கலையோ என்னவோ ?

2. சிம்பு : இங்க சர்ச்லதான் ஏம்மேலே உனக்கு காதல் வந்துச்சா ? சென்னைல நீ சர்ச்சுக்கு போமாட்டியா?

ஸ்.... இப்பவே கண்ண கட்டுதேன்னு நீங்க சொல்றது எனக்கு புரியுது

No comments:

Post a Comment