நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Friday, November 6, 2009

சிறு கதை


சேகர்,சுதா இருவரும் காதலித்து பல தடைகளை மீறி திருமணம் செய்தவர்கள், ஏனோ காதலிக்கும் போது இருக்கும் அந்த பிடிப்பும்,விட்டு கொடுக்கும் தன்மையும் , காதல் திருமணம் புரிபவர்கள் வாழ்வில் இறுதி வரை இருப்பதில்லை . அதே போல் இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இருவரும் படித்தவர்கள் ,அதனால்தானோ என்னவோ தம் படிப்பின் மூலம்
தனியாக வாழ முடியும் என்று எண்ணி எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் இருவரும் பிரிந்தனர்.

இவர்களுக்கு இரு குழந்தைகள் ,நீதிமன்றம் மூலம் முதல் குழந்தையான பிரபுவை சுதாவும் ,பெண் குழந்தை சாந்தியை சேகரும் பங்கிட்டு கொண்டு இருவரும் தனித்தனியே அவரவர் வாழ்கை பயணத்தை தொடங்கினர் . சேகர் வேலை நிமித்தம் காரணமாக தன் ஒரு வயது மகள் சாந்தியுடன் லண்டன் சென்று அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் வாழ்கையை தொடங்கினான்.சுதா தன் மகனுடன் சென்னையில் வசித்தாள்.அவள் படிப்பு அவளுக்கு நல்ல வேலையை பெற்று தந்தது.அதன் மூலம் பிரபுவை நன்றாக படிக்க வைத்து வறுமை தெரியாமல் அவனை சிறப்பாக வளர்த்தாள்.ஆனால் சுதா தனக்கு விவாகரத்து ஆனதையும் ,தனக்கு இன்னொரு மகள் இருப்பதையும் பிரபுவிடம் சொல்லாமல் மறைத்தாள்.பிரபு ஒவ்வொரு முறையும் தன் தந்தைப் பற்றி கேட்கும்போதும் ,ஏதோ ஒரு காரணம் சொல்லி உண்மையை மறைத்து வந்தாள்.


காலம் வெகு வேகமாக சென்றது,பிரபு நன்றாக படித்து தன் பட்டபடிப்பை முடித்தான்.நன்றாக படித்ததால் அவனுக்கு லண்டன் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது.தன் தாயிடமிருந்து பிரியா விடை பெற்று லண்டனுக்கு சென்றான்.காலத்தின் கொடுமை சாந்தியும் அதே பல்கலைகழகத்தில் சேர்ந்தாள்.பிரபு ,சாந்தியின் எதிர்பாராத சந்திப்பு அவர்களை நண்பர்களாக்கியது, இருவரும் முதல் சந்திப்பிலேயே பல நாள் பழகியது போல் உணர்ந்தனர்.இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களோ?


இவர்களது நட்பு காதலாக மாறியது,இருவரும் உயிருக்குயிராய் காதலித்தனர். சாந்தியின் அப்பா சேகருக்கும் பிரபுவின் சாதுர்யமான பேச்சும்,அவனுடைய அறிவார்ந்த ஆற்றலும் பிடித்துப்போக,தன் மகனென்று தெரியாமலேயே சாந்தியின் காதலுக்கு சம்மதித்தார்.ஆனால் பிரபுவோ தன் தாயிடம் சொல்ல தயங்கினான்,சாந்தியின் வற்புறுத்தலால் தொலைபேசி வாயிலாக தயங்கி தயங்கி தன் காதலை தன் தாயிடம் கூறினான்,முதலில் மறுத்த சுதா பின் பிரபுவின் ஆசையை மறுக்க முடியாமல் சம்மதித்தாள்,மேலும் லண்டனில் திருமணத்தை நடத்தவும்,தானும் லண்டன் வரவும் சம்மதித்தாள்,திருமண நாளும் முடிவு செய்யப்பட்டது.தங்கள் இரு குடும்பமும் தங்கள் காதலை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருவரும் லண்டனில் பல இடங்களுக்கு மிகவும் சுதந்திரமாகவும்,உல்லாசமாகவும் காதல் பறவைகளாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் உணர்ச்சிகளின் எல்லை மீறி தங்களையே அர்ப்பணித்துக்கொண்டனர்.மேலை நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த சாந்தியோ அதை மிகவும் சாதாரணமாகவே கருதினாள். ஆனால்,பிரபுவிற்கோ திருமணத்திற்கு முன்பே உறவு கொண்டதை எண்ணி மிகவும் வருந்தினான்.பின்பு திருமணம் செய்யப்போகிற பெண்தானே என்று தன்னைத்தானே சமாதானபடுத்திக்கொண்டான்.


சுதா தன் மகனின் திருமணத்திற்காக லண்டன் வந்தாள்,வந்தவளுக்கு பேரதிர்ச்சி! தன் கணவனான சேகரையே தன் சம்பந்தியாக பார்த்தவுடன் இந்த உலகமே ஒரு நிமிடம் இருண்டது போல் தோன்றியது, கடவுளே என்ன கொடுமை இது! இந்த நிலைமை வேறு எந்த பெண்ணிற்க்கும் வரக்கூடாது என்று கதறி அழுதாள்,சேகரும் செய்வதறியாது திகைத்து நின்றான்.தாங்கள் இருவரும் உடன்பிறந்த அண்ணன்,தங்கை என்பதை அறிந்த பிரபுவும்,சாந்தியும் அந்த நிமிடமே இறந்ததுப்போல் உணர்ந்தனர்.தன் அண்ணனையா காதலித்தேன்,அவனுடனா அந்தரங்கத்தில் ஈடுபட்டேன் என்ற குற்ற உணர்ச்சி இருவர் மனதையும் வதைத்தது,மனதால் இறந்துவிட்ட அவர்களால் வெரும் கூடுகளாய் இவ்வுலகில் வாழ விரும்பாமல்,தற்கொலை செய்து கொண்டனர்.தாங்கள் செய்த தவறினால் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முடிந்து போனதே,என்று சேகரும்,சுதாவும் மிகவும் வருந்தினர்,என்ன வருந்தி என்ன பிரயோஜனம் போன உயிர் திரும்பியா வரப்போகிறது?

No comments:

Post a Comment